‘கொவிட் தொற்றாளர்கள் 11 பேர் கொலை’ – விஜித MP

மகர சிறைச்சாலையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டமை இந்த ஆட்சியின் போதே இடம்பெற்றது என தேசிய மக்கள் சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (21/01) பாராளுமன்றில் ஜனாதிபதியின் அக்கிராசன உரையின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தின் போது உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கே உரையாற்றிய அவர், சமூக ஊடகங்களில் கூறப்பட்ட விடயங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டமையும் மனித உரிமைகள் மீறலாகும். அதுமாத்திரமின்றி, பாராளுமன்றத்தை ஒத்தி வைத்தமையும், உள்ளூராட்சிமன்ற தேர்தலை ஒத்திவைத்தமையும் மனித உரிமை மீறல்களாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

'கொவிட் தொற்றாளர்கள் 11 பேர் கொலை' – விஜித MP

Social Share

Leave a Reply