கொழும்பு துறைமுக நகரத்தில் கட்டண வசூல்

கொழும்பு துறைமுக நகரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட மெரினா (marina) நடை பாதையை அண்மித்த பகுதியில் புகைப்படம் எடுத்தல் மற்றும் காணொளி பதிவு நடவடிக்கைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, 2-5 பேர் பங்கேற்புடன் குறித்த பின்னணியைப் பயன்படுத்தி 3 மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்திற்குள் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக புகைப்படம் எடுப்பதற்கு 30, 000 ரூபா கட்டணமாக வசூலிக்கப்படும்.

மேலும், 1 – 3 மணித்தியாலங்களுக்குள் 6 – 10 பேர் படப்பிடிப்பில் ஈடுபட்டால், 50,000 ரூபா கட்டணமாக அறவிடப்படுகிறது.

அத்துடன், 10 க்கும் மேற்பட்டவர்கள் மூன்று மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்திற்குள் படப்பிடிப்பில் ஈடுபட்டால் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும் என குறித்த கட்டணப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 பேருக்கு மேல் வர்த்தக நோக்கில் படப்பிடிப்பில் ஈடுபட்டால், மூன்று மணித்தியாலங்களுக்கு குறைவான நேரத்துக்காக கட்டணத்தை பேசித் தீர்மானிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 10 பேருக்கும் குறைவான எண்ணிக்கையிலானோர், ஒன்று முதல் 3 மணித்தியாலங்களுக்குள் படப்பிடிப்பில் ஈடுபடுவதாயின் ஒரு இலட்சம் ரூபா கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்தில் கட்டண வசூல்

Social Share

Leave a Reply