வடக்கிற்கான புகையிரதங்களில் விபத்துகள் நடைபெறுவது அதிகமாகி வருகின்றன. அந்தவகையில் நேற்றைய தினமும் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். புகையிரத கடவைகளை கடப்பதில் போதிய அறிவின்மையும், கவலையீனமும் இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
இந்த விடயம் தொடர்பில் மக்களுக்கு அறிவூட்டும் செயற்பாடுகளை செய்வது கட்டாயம். சமூக சேவையாளர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
யாழ்ப்பாணம் – சங்கத்தானை பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று (24/01) உயிரிழந்துள்ளார்.
புகையிரத பாதையை கடக்க முற்பட்ட போது குறித்த மாணவன் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதியுள்ளார்.
விபத்தில் கொடிகாமத்தை சேர்ந்த 18 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.