இரு பிரிவுகளில் கட்டணங்கள் அறவிட தீர்மானம்?

பேருந்துகளில் பயணிகளிடம் இரண்டு பிரிவுகளில் கட்டணங்களை அறவிடுவதற்கு போக்குவரத்து அமைச்சு ஆராய்ந்து வருகின்றது.

பேருந்து ஆசனங்களில் அமர்ந்து பயணிப்போர் மற்றும் நின்றுகொண்டு பயணிப்போர் என்று இரண்டு பிரிவுகளில் கட்டணங்களை அறவிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பேருந்துகளில் ஆசன எண்ணிக்கையை விடவும் அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதும், சில பிரதேசங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. ஆகையால் அமர்ந்து கொண்டு பயணிப்போருக்கும் நின்று கொண்டு பயணிப்போருக்கும் இரண்டு விதமான கட்டணங்களை அறவிட எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரு பிரிவுகளில் கட்டணங்கள் அறவிட தீர்மானம்?

Social Share

Leave a Reply