தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு?

எதிர்வரும் காலங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய்யும் சுத்திகரிக்கப்படுவது கட்டாயமாக்கப்படும் என தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

தெங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் கீர்த்தி வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

சிலர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் போலியான கருத்துகளையும் விடயங்களையும் முன்வைத்தமையால் சந்தையில் தேங்காய் எண்ணெய்க்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் அத்துடன் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிகாட்டினார்.

இதனை தொடர்ந்து எதிர்காலத்தில் நாட்டில் தேங்காய் எண்ணெய் விலையும் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை 700 ரூபா தொடக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது.

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளாந்தம் உயர்த்தப்பட்டு வாழ்க்கை செலவினங்களும் அதிகரித்துள்ள நிலையில் மேலும் பல பொருட்களின் விலையுயர்வுகளானது, பொதுமக்களின் சராசரி இயல்பு வாழ்க்கைக்கு தொடர்ந்தும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு?

Social Share

Leave a Reply