களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் (24/01) இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதியாகியிருந்தது.