சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளராக மீண்டும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில், அந்த பதவிக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு,முன்னர் பணியாற்றிய அதே பதவிக்கு மீண்டும் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவால், அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.