கரிபியன் பிரிமியர் லீக் சம்பியன்

கரிபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடர் நிறைவுக்கு வந்துள்ளது. இறுதிப்போட்டியில் சென்ட் லூசியா கிங்ஸ் மற்றும் சென்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியட்ஸ் அணிக்குமிடையிலான இறுதிப் போட்டி நடைபெற்றது. விறு விறுப்பான போட்டியில் சென்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியட்ஸ் அணி 3 விக்கெட்களினால் வெற்றி பெற்று சம்பியனாக மகுடம் சூடியது.


முதலில் துடுப்பாடிய சென்ட் லூசியா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது. இதில் ரக்கீம் கோர்ன்வெல், ரொஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 43 ஓட்டங்களை பெற்றனர். பவாட் அஹமட், நஸீம் ஷா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.


பதிலுக்கு துடுப்பாடிய சென்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் டொமினிக் ட்ராக்ஸ் 48 ஓட்டங்களையும், ஜோஸுவா டி சில்வா 37 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வஹாப் ரியாஸ் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.


போட்டி தொடர் நாயகன் விருதினை ரொஸ்டன் சேஸ் வெற்றி பெற்றார். கூடுதலான சிக்ஸர் விருதினை க்றிஸ் கெயில் வெற்றி பெற்றார்.

Social Share

Leave a Reply