களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் அரசிற்குச் சொந்தமான சிறிய மின்முனையம் டீசல் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு இயக்கப்படுவதனால் அரசாங்கத்திற்கு நாளாந்தம் 20 மில்லியன் ரூபா வரை நட்டம் ஏற்படுவதாக அறியமுடிகிறது.
அதன்படி மாதாந்தம் அரசாங்கத்திற்கு சுமார் 600 மில்லியன் ரூபா வரை நட்டம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மின்சார சபையின் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.
மின்னுற்பத்திக்கான விசேட எண்ணெய் மற்றும் டீசல் ஆகிய இரண்டும் பயன்படுத்தப்பட்டுக் குறித்த மின்முனையம் இயக்கப்பட வேண்டும். ஆனால் மின்னுற்பத்திக்கான விசேட எண்ணெயை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக டீசல் மாத்திரமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் அரசாங்கத்திற்கு நாளாந்தம் 20 மில்லியன் ரூபா வரை நட்டம் ஏற்படுகிறதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
