பெப்ரவரியில் மீற்றர் மானி பொருத்தும் வேலைத் திட்டம்

வாடகை முச்சக்கர வண்டிக்காக மீற்றர் மானி பொருத்தும் வேலைத்திட்டம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென அளவீட்டு அலகுகள், தரநிலைகள் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாடகை வாகனங்களுக்காக மீற்றர்களை கொள்வனவு செய்தல், உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய செயற்பாடுகளுக்கு முன்னர் சந்தை செயற்பாடுகளின் பயன்பாட்டுக்கு பொறுத்தமானது என பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு மாதிரிகளுக்கான அனுமதி திணைக்களத்தில் பெற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.என் அகுரன் திலக இதனை தெரிவித்துள்ளாா்.

மாதிரிகளுக்கான அனுமதியை பெற்றுக்கொண்ட விற்பனை நிறுவனங்களுக்கு மாத்திரம் வாடகை வாகனங்களுக்காக மீற்றர்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்பதுடன் அவ்வாறு அனுமதி கிடைக்காத நிறுவனங்களிடமிருந்து வாடகை வாகனங்களுக்கான மீற்றர்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும் அவர் சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெப்ரவரியில் மீற்றர் மானி பொருத்தும் வேலைத் திட்டம்

Social Share

Leave a Reply