பிரண்ட்ஷிப் படத்துக்கு கிரிக்கெட் வீரர்கள் சுவாரசியமாக வாழ்த்து

நாளை 17 ஆம் திகதி இந்தியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், மற்றும் இலங்கை நடிகை லொஸ்லியா ஆகியோரின் நடிப்பில் வெளிவரவுள்ள பிரண்ட்ஷிப் படத்துக்கு இத்தியா கிரிக்கெட் வீரர்கள் குறிப்பாக தமிழக கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரின் தங்களது வாழ்த்துக்களை சுவாரசியமாக தெரிவித்துள்ளனர்.

தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“தமிழ் சினிமா உங்களை அன்புடன் வரவேற்கிறது தமிழ் புலவரே!!Friendship படத்துக்கு நான் மரண வைட்டிங் பஜ்ஜி பா @harbhajan_singh ஹீரோவா மிரட்டியிருப்பாப்ல நாளைக்கு தியேட்டர் எல்லாம் விசில் தான்..மக்களே மறக்காம தியேட்டர் போய் #FriendshipMovie பாருங்க”


அதற்கு ஹர்பஜன் சிங் இவ்வாறு பதிலளித்துள்ளார்.


“நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை”.. நன்றி DK சகோ. உங்கள் ஆசிர்வாதம்!! வாழ்த்துகள்!! இருக்கும் வரை எல்லாம் வெற்றி தான். #Friendship டீம் உங்கள் வாழ்த்துகளை பார்த்து சிலிர்த்து நிற்கின்றனர்
நாளை நமதே !!

பிரண்ட்ஷிப் பட போஸ்டரை போட்டு ரவிச்சந்திரன் அஷ்வின் ஹர்பஜன் சிங் மற்றும் நடிகர் சதீஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்களை இவ்வாறு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

“பிரண்ட்ஸ் ல வந்த சூர்யா விஜய் மாரி நீங்க ரெண்டு பேரும் இந்த படத்துக்கு அப்புறம் கொடிகட்டி பறக்க என் வாழ்த்துக்கள்”

விரேந்தர் செவாக்

“யெப்படி இருக்கீங்க என தமிங்கிலீஷில் எழுதி இந்த படம் “ரொம்ப நல்ல Fun With அர்ஜுன் & பஜ்ஜி என தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் நடிகை லொஸ்லியா இந்த திரைப்படத்தில் நடித்துள்ளமை இலங்கை மக்கள் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

பிரண்ட்ஷிப் படத்துக்கு கிரிக்கெட் வீரர்கள் சுவாரசியமாக வாழ்த்து

Social Share

Leave a Reply