நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கொவிட் – 19 தொற்றுநோய் முக்கிய காரணம் என்றும், நாட்டை மூடாமல் தொடர முடிந்தால் அடுத்த சில மாதங்களில் அதிலிருந்து நாட்டை மீட்க முடியும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
உடுகம்பொலவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டால், தற்போதைய நெருக்கடி மேலும் மோசமடையக்கூடும் என்றார்.
நாடு இன்று சந்திக்கும் பல நெருக்கடிகளுக்கு டொலர் நெருக்கடியும் பிரதான காரணமாகும். எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் மற்றும் மின்சாரம் போன்ற பிரச்சனைகளுக்கு உண்மையான காரணம் இதுவேயாகும்.
இந்நிலையில் கொவிட் – 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பெரும் செலவைச் சுமக்க வேண்டியிருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
