சுகாதார துறை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்

சம்பள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து துணை மருத்துவ சேவைகள் மற்றும் தாதியர் சேவைகள் ஒன்றிணைந்து தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

இந்த போராட்டம் இன்று காலை முதல் முன்னெடுக்கப்கட்டு வருகின்றது.

சுகாதார அமைச்சின் செயலாளருடனான கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல வைத்தியசாலை ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

சுகாதார துறை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்

Social Share

Leave a Reply