கடந்த 14 ஆம் திகதி ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீடு இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டது. அவரது குடியிருப்பு தொகுதியில் துப்பாக்கி சூடும் நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அவரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி உலக ராணி போட்டிக்கான இலங்கை போட்டியாளரான முன்நாள் திருமதி இலங்கை அழகு ராணி புஸ்பிகா டி சில்வா நாளை(23.02) பொலிஸ் விசாரணைக்காக பிலியந்தல பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
சமுதித்தவின் யு டியூப் நிகழ்ச்சியில் பங்குபற்றியது தொடர்பில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பிரசன்ன பெரேரா பொலிஸாரினால் நான்கு மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
புஸ்பிகா டி சில்வா திருமதி இலங்கை போட்டியில் கடந்த வருடம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அவரது பட்டம் பறிக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பான சர்ச்சையான விடயங்களை குறித்த நிகழ்ச்சியில் சமுதித்த வெளியிட்டிருந்தார்.