இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 35.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை எரிபொருள் கப்பலுக்கு செலுத்தியுள்ளது. அதன் காரணமாக எரிபொருள் இறக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கவுள்ளன.
சிங்கப்பூர் நிறுவனத்தின் எண்ணை கப்பல் 37,500 மெட்ரிக் தொன் டீசலுடன் கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே தரித்து நின்றது.
நேற்று இரவு பணம் செலுத்தப்பட்டதனை தொடர்ந்து விரைவில் எரிபொருள் இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருளினை இறக்கும் பணிகள் ஆரம்பித்துள்ளமையினால் விரைவில் டீசல் விநியோகம் இடம்பெறும். அதன் காரணமாக டீசல் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை குறைவடைந்துள்ளது.