இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இந்த வருட போட்டிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று போட்டிகளில் மோதவுள்ளன. இரு குழுக்களும் கடந்த கால சம்பியன் வென்ற எண்ணிக்கைகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் விளையாடவுள்ளன. தங்கள் குழுக்களில் உள்ள மற்றைய நான்கு அணிகளுடன் தலா இரண்டு போட்டிகளில் மோதவேண்டும். மற்றைய குழுவில் உள்ள அணிகளோடு ஒரு தடவை மோத வேண்டும். தங்கள் குழுவில் எந்த இடத்தில் ஒரு அணி இருக்கிறதோ மற்றைய குழுவில் அதே இடத்தில உள்ள அணியோடு இரண்டு தடவைகள் மோத வேண்டும்.
உதாரணமாக குழு A இல் மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடம். குழு A இல் உள்ள அணிகளோடு இரண்டு தடவை விளையாடவேண்டும். குழு B இல் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலிடம். அவர்களோடு இரண்டு தடவை விளையாட வேண்டும். குழு B இல் உள்ள மற்றைய அணிகளோடு ஒவ்வொரு தடவை மோத வேண்டும்.
முதல் சுற்று போட்டிகள் மும்பை மற்றும் பூனே ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன. மார்ச் மாதம் 26 திகதி ஆரம்பிக்கும் இந்த தொடர் மே 29 நிறைவடையவுளள்து. 70 போட்டிகள் மொத்தமாக நடைபெறவுள்ளன.
குழு A – மும்பை இந்தியன்ஸ், கொல்கொத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், டெல்லி கப்பிடல்ஸ், லக்னோ சுப்பர் ஜியன்ட்ஸ்
குழு B – சென்னை சுப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ்
