நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்தியா பயணம் பிற்போடப்பட்டுள்ளது. இன்றையதினம் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு பயணம் செல்வதாக இருந்தது. ஆனால் குறித்த பயணம் சிறிது காலத்துக்குள் மீள ஒழுங்கு செய்யபபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நிதி உதவிகளையும்,கடனுதவிகளையும் பெறும் நோக்கில் முதல் கட்ட பேச்சுவார்தைகளுக்கா பசில் ராஜபக்ஷ இந்தியா சென்று வந்திருந்தார். இரண்டாம் கட்ட பேச்சுவார்தைகளுக்கவும், இந்திய வெளியுறவு அமைசர் ஜெய்ஷங்கரை சந்திப்பதற்காகவும் நிதியமைச்சர் இந்தியா செல்லும் திட்டம் காணப்பட்ட நிலையிலேயே குறித்த பயணம் பிற்போடப்பட்டுள்ளது.
