நேற்று(27.02) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா முத்துமானி பட்டத்துக்கான பரீட்சையில் தோற்றியிருந்தார். “இயற்கை விஞ்ஞான முதுமானி பரீட்சையின் இரண்டு பாடங்களுக்கு பரீட்சசை எழுதியுள்ளேன். இரண்டும் கடினமாக இருந்தன. ஆனாலும் சமாளித்து கொண்டேன்”என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பரீட்சையின் பின்னர் சக பரீட்சார்த்திகளோடு உரையாடும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
“அரசியலுக்கு பாடவிதான நிபுணத்துவர் தேவையில்லை. ஆனால் கற்பதனை நிறுத்திக் கொண்டால் புதுமையான முடிவுகளை எடுப்பது பற்றி நினைத்து பார்க்க முடியாது”எனவும் அவர் தனது பதிவில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவரின் பதிவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விளையாட்டு, இளைஞர் விவகார அமைசர் நாமல் ராஜபக்ஷ, “இன்னும் பல அரசியல்வாதிகள் படிப்பதற்கும், அதற்கு விருப்பம் காட்டுவதனையும் பார்க்க ஆசைப்படுவதாக” தனது பதில் ட்விட் பதில் தெரிவித்துள்ளார்.

