ரஸ்சியா யுக்ரைன் பேச்சுவார்த்தை நிறைவு

ரஷ்யா மற்றும் யுக்ரைன் நாடுகளது பிரதிநிதிகளுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவுக்கு வந்துள்ளது. பெலரஸ் எல்லையில் நடைபெற்ற பேச்சுவேதையினை நிறைவு செய்துகொண்டு தமது நாடுகளின் தலைநகரங்களை நோக்கி பிரதிநிதிகள் திரும்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடுமையாக நடந்து வரும் மோதலுக்கு மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தையில் இரு நாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

தங்களது நாட்டு தலைவர்களோடு பேச்சுவார்த்தைகள் தொடர்பான விடயங்களை கலந்துரையாடி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடர்பில் ஏற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கோடு அவர்கள் சென்றுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதய நிலையில் போர் தொடர்ந்தும் நடைபெறும் வாய்ப்புகளே அதிகமா இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ரஸ்சியா இராணுவம் தொடர்ந்தும் யுக்ரைனின் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் நகர்ந்து செல்வதாகவும் ஆனால் யுக்ரைனின் பதில் தாக்குதல் காரணமாக முன்னேற்றம் தடைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஸ்சியா யுக்ரைன் பேச்சுவார்த்தை நிறைவு

Social Share

Leave a Reply