விமல், கம்மன்பில அடுத்த கட்டம்

பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இன்று முடிவெடுக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அறிய முடிகிறது. இன்று ஆளும் பொதுஜன பெரமுனவின் 11 பங்காளி கட்சிகளது தலைவர்கள் இன்று சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பின் பின்னர் இருவரது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும், ஏனைய கட்சிகளும் முடிவெடுக்கப்பார்கள் என நம்பப்படுகிறது. எதிர்க்கட்சி ஆசனத்தில் பாராளுமன்றத்தில் அமர்வார்களா அல்லது தொடர்ந்தும் ஆளும் கட்சியோடு தொடர்வார்களா என்பது தொடர்பில் எதிர்பார்ப்புகள் அரசியல் வட்டாரங்களுக்குள் ஏற்பட்டுள்ளன.

நேற்று இரவு பாரளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வலுசக்தி அமைச்சுக்கு சென்று தனக்கு சொந்தமான பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறியதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சு பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டது தனக்கு சந்தோசம் என தெரிவித்துள்ள உதய கம்மன்பில, தானின்றி இந்த அரசாங்கம் நல்ல முடிவுகளை எடுத்தால் தனக்கு சந்தோசமெனவும், தான் ஒரு போதும் பொய் கூறியதில்லை, உண்மையினை மட்டுமே பேசியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

விமல்வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கடந்த புதன்கிழமை மைத்திரிபால சிரிசேன, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அடங்கிய 11 கட்சிகளோடு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு அரசாங்கம் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கான திட்டம் ஒன்றினையும் வெளியிட்டிருந்தனர்.

விமல், கம்மன்பில அடுத்த கட்டம்

Social Share

Leave a Reply