அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் உலகின் முன்னணி வெளிபுற சுழல் பந்துவீச்சாளருமான ஷேன் வோர்ன் காலமானார்.
52 வயதில் தாய்லாந்தில் வைத்து காலமானார். மாரடைப்பினால் காலமாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உலகின் சிறந்த வீரர்களில் ஐவரில் ஒருவராக விஸ்டன் சஞ்சிகை அறிவித்த வீரர். 708 டெஸ்ட் விக்கெட்களை கைப்பற்றிய இவர் 1992 ஆம் ஆண்டிலிருத்து 2007 ஆம் ஆண்டு வரை அவுஸ்திரேலியா அணிக்காக விளையாடியுள்ளார்.
தாய்லாந்தில் அவர் தங்கிய விலாவில் இயக்கமின்றி இருந்ததனை அவதானித்த மருத்துவ பிரிவினர் அவரை பரிசோதனை செய்து இறந்ததாக அறிவித்துள்ளனர்.
மேலதிக விபரங்களை குடும்பத்தினர் வெளியிட விரும்பவில்லை எனவும் விரைவில் முழுமையான விபரங்கள் வெளியிடப்படுமென நம்பப்படுகிறது.