வவுனியா ஓமந்தை வரையிலான புகையிரத பாதை திருத்த வேலைகள் மே மாதம் 05 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் அறிவறுத்தலின் அடிப்படையில் இந்த திருத்த பணிகள் பிற்போடப்பட்டுள்ளன. மாகோ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையினை முழுமையாக நவீன முறையில் மாற்றியமைக்கும் வேலைத்திட்டம் நேற்று(05.03) முதல் ஆரம்பிக்கப்படுவதாகவும், யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத சேவைகள் மாகோவுடன் மட்டுப்படுத்தப்படுமெனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையியலே இந்த வேலைகள் பிற்போடப்பட்டுள்ளன. எனவே குறித்த திகதி வரை யாழ்ப்பணம் வரையிலான புகையிரத சேவைகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன.