டொலர் வீழ்ச்சி

இலங்கை ரூபாவுக்கான டொலர் பெறுமதியினை 230 ரூபாவாக மத்திய வங்கி குறைத்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர வீழ்ச்சியினை சீர் செய்யவும், வெளிப்புற காரணிகளது தாக்கம் காரணமாகவும் இலங்கை மத்திய வங்கியின் நாணய நிதியம் இந்த முடிவினை எடுத்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள சுற்று நிரூபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மற்றும் உள்ளூர் சந்தைகளது நிலவரங்களை கவனித்து அதனடிப்படையில் மாற்றங்கள் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

சந்தையில் உடனடியாக டொலரின் விலையினை அதிகரித்து பரிமாற்றத்தினை செய்ய முடியுமென மத்திய வங்கி அதிகரித்துள்ளது. டொலரின் அதிகபட்ச விலை 230 ரூபவாக இருக்கவேண்டுமெனவும் மத்திய வங்கி அறிவித்துள்ளதுடன், நெகிழ்வுத்தன்மையான டொலர் பெறுமதியினை கடைபிடிக்குமாறும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

டொலர் வீழ்ச்சி

Social Share

Leave a Reply