பசில் இந்த மாதம் இந்தியா செல்லவுள்ளார்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த மாத இறுதியில் இந்தியா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு இந்தியா நிதியுதவிகள் மற்றும் கடன்கள் வழங்குவதில் தொடர்பிலான முதற் கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்து, இரண்டாம் கட்ட பேச்சுவார்தைகளுக்காக இந்தியா செல்வதற்கு இரண்டு தடவைகள் தயாராகியிருந்த நிலையில் இந்திய தரப்பினால் அந்த சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷ்ங்கருக்கும் இடையில் தொலைபேசியில் உரையாடப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் இந்த மாத இறுதியில் இருவருக்குமான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளதாகவும், இலங்கையிலுள்ள, இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதனால் சில நிபந்தனைகளை இந்தியா முன்வைத்துள்ளதாக அண்மையில் சில தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்தோடு ஏற்கனவே வழங்குவதாக இருந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர் எரிபொருள் கடன் இன்னமும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சு ரீதியிலான சில உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் இன்னமும் பூர்த்தி செய்யமுடியாத காரணத்தினால் அந்த பணம் இலங்கையை வந்து சேரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய பயணம் பூர்த்தியடையும் நிலையில் இந்த பணம் முழுமையாக இலங்கையை வந்தடையும் என நம்பப்படும் அதேவேளை, மேலதிக உதவிகள் இந்தியாவிலிருந்து கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, மாகாண சபை தேர்தலை நடாத்துவது உட்பட்ட இன்னும் சில அரசியல் நகர்வுகள் உளளடங்கிய நிபந்தனைகளுடன் இலங்கைக்கு உதவி செய்யும் வாய்ப்புகள் உளளதாகவும் நம்பப்படுகிறது.

பசில் இந்த மாதம் இந்தியா செல்லவுள்ளார்

Social Share

Leave a Reply