இலங்கைக்கு புதிதாக வருகை தந்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங், இலங்கையின் முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார். அந்தவகையில் இன்று காலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனை அவர் சந்தித்தார்.
அனைத்து இலங்கையர்களுக்கும் அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியின் அவசியம் குறித்து இரா.சம்மந்தன் அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிடம் தெரிவித்துள்ளார்.
சகல சமூகங்களுக்கும் ஜனநாயக முறையிலான ஆட்சி, மனித உரிமைகள் போன்ற விடயங்களை நிலைநாட்டுதல், மற்றும் பொருளாதார வளர்ச்சி தொடர்பிலு தொடர்ந்தும் கலந்துரையாடல்களில் ஈடுபடுவது தொடர்பில் அமெரிக்க தூதுவர் தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரனும் கலந்து கொண்டார்.
