நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடிகளை கருத்திற் கொண்டு, எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சேமிப்பது தொடர்பிலான சுற்றறிக்கையை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி, இது தொடர்பான சுற்றறிக்கையினை கடந்த செவ்வாய்க்கிழமை திணைக்களங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அரச நிறுவனங்களில் உள்ள அனைத்து குளிரூட்டிகளும் பிற்பகல் 2.30 மணிக்குள்
அணைக்கப்பட வேண்டும். கூடுதல் எரிபொருளுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், கூட்டங்கள் மற்றும், பிற நோக்கங்களுக்கான வெளிமாவட்ட அதிகாரிகளை கொழும்புக்கு அழைப்பதும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
