ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளருமான ஜய் ஷா, இன்று (18.03) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
ஆசிய கிரிக்கெட் சபையின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, ஜய் ஷா மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து 40 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
ஜூன் மாதம் இலங்கையில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள நிலையிலேயே ஆசிய கிரிக்கெட் சபையின் வருடாந்த பொதுக் கூட்டம் இலங்கையில் நடைபெறுகிறது.

