முன்நாள் பாராளுமன்ற உறுப்பினரும், நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியர்களின் ஆலோசனையின் கீழ் அவர் தேசிய வைத்தியசாலையின் என்பு முறிவு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சன் அவரது முழங்காலில் செய்யப்பட்ட சத்திர சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
