புகையிரத டிக்கெட் ஒன்லைன் பதிவு ஆரம்பம்

இலங்கையின் பதிவு செய்யப்படும் சகல புகையிரதங்களுக்குமான இருக்கைகளை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று (21.03) போக்குவரது அமைச்சர் திலும் அமுனுகம இந்த திட்டத்தினை ஆரம்பித்து வைத்துள்ளார்.

செல்லிடப்பேசி செயலி மற்றும் இணைய வெளியூடாகவும் இருக்கைகளை பதிவு செய்து கொள்ள முடியும். டிக்கெட்டுகளை புகையிரத நிலையத்தில் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் ஈ டிக்கெட் நடைமுறை மற்றும் QR கோட் செயல் முறை அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழுள்ள இணையத்தின் மூலம் முதல் தர வகுப்புகள், இரண்டாம் தர, மூன்றாம் தர வகுப்புகள், குளிரூட்டபப்ட்ட, கண்காட்சி கூடம் போன்றவற்றை முற்பதிவு செய்ய முடியும். சீசன் டிக்கெட்டுகளையும் முற்பதிவு செய்ய முடியும்.

https://seatreservation.railway.gov.lk

புகையிரத டிக்கெட் ஒன்லைன் பதிவு ஆரம்பம்

Social Share

Leave a Reply