நாடு மூடப்படுமா?

நாட்டினை தற்காலிகமாக மூடுமாறு ஆலோசனை முவைக்கப்பட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்துகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அத்தோடு மின்தடை காரணமாக தொழிற்சாலைகள் மற்றும் வியாபர நிறுவனங்கள் மூடிய நிலையில் காணப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் ஒரு சில தினங்களுக்கு நாட்டை மூடுவதன் மூலம் இந்த சிக்கல் நிலைகளை சுமூகமான நிலைக்கு கொண்டுவர முடியுமென்ற யோசனையே முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இந்த யோசனைக்கு அரச தரப்பிலிருந்து எந்த பதில்களும் வெளியாகவில்லை. ஏற்கனவே மக்கள் நாட்டு நிலை மோசமடைந்துள்ளமையினால் கொதித்து போயுள்ளனர். இதில் நாட்டை மூடும் முடிவுக்கு போனால் என்ன நடக்குமோ?

நாடு மூடப்படுமா?

Social Share

Leave a Reply