மின்வெட்டு 10 மணித்தியாலங்களை தாண்டும்

அமுலிலுள்ள மின்தடை 10 மணித்தியாலங்களுக்கு மேலே செல்லுமென ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 10 மணித்தியால மின்தடை அமுலுக்கு வருமென தாம் முன்னரே கூறியது நடந்துள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் 10 மிணித்தியாலங்களுக்கு மேல் மின்தடை அமுலாகுமெனவும் கூறப்பட்டுள்ளது.

வரும் வாரம் முதல் இந்த நிலை ஏற்படும் வாய்ப்புகளுள்ளன. மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக மின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்படும் நிலை ஏற்படுமெனவும் மின்சாரை சபை அதிகாரிகளை மேற்கோள்காட்டி குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மின்தடை அதிகரிக்கும் வாய்ப்புகளுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்ட வேளையில், பொது சேவைகள் ஆணைக்குழு அதனை மறுத்தது. எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படுவதாகவும், படி படியாக அது குறைவடையுமெனவும் தெரிவித்திருந்தது.

இம்மாதம் 02 ஆம் திகதி நிதியமைச்சர் மின்தடை 05 ஆம் திகதியோடு நிறுத்தப்படுமென அமைச்சரவைக்கு தெரிவித்திருந்தார். அவர் கூறியது பொய்த்திருக்கிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வாரத்துக்கான மின் உற்பத்திக்கான எரிபொருள் இதுவரை கிடைக்கவில்லையெனவும், அதனாலேயே 10 மணித்தியால மின்தடை அமுலுக்கு வந்ததாகவும், உடனடியாக எரிபொருள் கிடைத்தால் மின் தடை நேரம் குறைவடையலாமென மின்சாரசபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்வெட்டு 10 மணித்தியாலங்களை தாண்டும்

Social Share

Leave a Reply