இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களுக்குக்கிடையிலான சந்திப்பில் சகல அமைச்சர்களும் பதவி விலகுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இடைக்கால அமைச்சரவை ஒன்றை நியமித்து தேசிய அரசாங்கமாக அமைத்து நாட்டின் பொருளாதார சிக்கல்களை தீர்க்கும் நோக்கில் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்வது என்ற யோசனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
பிரதமர் பதவி விலகமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகல அமைச்சர்களும் தங்களது இராஜினாமா கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்ததாகவும், அவர் ஜனாதிபதியோடு மேலதிக கலந்துரையாடலின் பின்னர் இறுதி முடிவினை எடுக்கவுள்ளதாகவும் மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
