அமைச்சர்களது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வார்

நேற்றைய தினம்(03.04) அமைச்சரவை அமைச்சர்கள் தங்களது இராஜினாமா கடிதங்களை பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவிடம் கையளித்திருந்தனர். இன்றைய தினம்  பிரதமரினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் குறித்த கடிதங்கள் கையளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் கையளிக்கப்படுடம் கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவுள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பொருளாதர இஸ்திர தன்மை சிக்கலான நிலையில் காணப்படுவதனால், அரசியல் சிக்கல் நிலை உருவாகியுள்ளது. இதனை சீர் செய்யும் முகமாக அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.

தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படவேண்டுமென்ற கோரிக்கைகளுக்கு அமைவாக இந்த இடைக்கால அமைச்சரவை ஒன்று உருவாக்கப்படும் வாய்ப்புகள் உளளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வருகின்றன.

இன்றைய தினம் புதிய அமைச்சரவை ஒன்று அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன.

அமைச்சர்களது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வார்

Social Share

Leave a Reply