நாட்டின் மோசமான அரசியல் இழுபறி நிலைமையில் இன்று காலை பாராளுமன்றம் கூடுகிறது. காலை 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கவுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமயில் பாராளுமன்றம் கூடவுள்ளது.
இன்றைய அமர்வு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையினை கணக்கிட முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அதிகமானவர்களை கொண்டிருக்கும் என்ற போதிலும் 113 உறுப்பினர்களை கொண்டு ஆட்சியமைக்கும் அதிகாரத்தோடு இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்கவுள்ளதாக பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்ஸா நேற்று தெரிவித்திருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று தமது அறிவிப்பை வெளியிடவுள்ளது.
அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரும்,ம் வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் ஆளும் தரப்போடு இணைந்து செயற்படும் வாய்க்குள் அதிகமாக காணப்படுகின்றன.
பெரும்பான்மையினை நிரூபிக்கும் கட்சிக்கு ஆட்சியினை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்றைய பாராளுமன்ற அமர்வு பல கேள்விகளுக்கு முடிவினை தரவுள்ளது.
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று பாராளுமன்றத்தை முடக்கும் செய்றாடுகளுக்கு தயாராகி வருவதாகவும் அறிய முடிகிறது. மக்கள் போராட்டங்களுக்கு மத்தியில் பாராளுமன்ற அமர்வு இன்று உச்சகட்ட பரபரப்பை தரும் என்ற எதிர்பார்ப்போடு மக்கள் காத்தருக்கின்றனர்.
இவை எல்லாவற்றும் மத்தியில் ஓடிவிட்டார்கள் என கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டில்தான் இருக்கிறார்களா அல்லது உண்மையாகவே ஓடிவிட்டார்களா என்பதனை உறுதி செய்யும் இன்றைய பாராளுமன்ற அமர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது.
