அவசகரால வாக்களிப்பு உடன் நடாத்தப்படவேண்டும் – சுமந்திரன்

அவசராகால சட்ட நீடிப்பு தொடர்பான வாக்களிப்பு உடனடியாக பாராளுமன்றத்தில் நடத்தப்படவேண்டும் எனவும் தவறினால், பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை சந்திக்க நேரிடுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் இன்று பாராளுமன்ற உரையில் தெரிவித்துள்ளார்.

உடனடியாக அவசரகால சட்டம் தொடர்பில் வாக்களிப்பு நடாத்தப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் அனுமதி வழங்கப்படுகிறதோ இல்லையோ நாளையதினம் வாக்களிப்பு நடாத்தப்பபடவேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் முன் வைத்தார்.

14 நாட்கள் வாக்களிப்பின்றி செல்லும் பட்சத்தில் அரசியல் அமைப்பினை மீறும் செயலாக இது அமையுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆகவே பாராளுமன்றத்தில் அவசரகால சட்டம் தொடர்பில் பாராளுமன்றமே முடிவெடுக்க வேண்டுமெனவும், இல்லாது போனால் பாரளுமன்றத்தையும் அவமதிக்கும் செயலாகும் என்பதனையும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

அவசகரால வாக்களிப்பு உடன் நடாத்தப்படவேண்டும் - சுமந்திரன்

Social Share

Leave a Reply