ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டதற்காகவே அமைச்சர்கள் பதவிகளை இராஜினாமா செய்ததாக பெருந்ததெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று தனது பாராளுமன்ற உரையில் தெரிவித்தார்.
நாட்டின் தற்கால நிலையை கருத்திற் கொண்டு அடுத்த கட்ட நகர்வு நோக்கி செல்வதற்காக இந்த முடிவினை ஜனாதிபதி எடுத்ததாக மேலும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது உரையில் கூறினார்.
மக்கள் விடுதலை முன்னணி தற்காலத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு காரணமாக இருப்பதாகவும், தொடர்ந்தும் இளைஞர்களையும், மாணவர்களையும் போராட்டங்களுக்கு வீதியில் இழுத்துவிடுவதாகவும் குற்றம் சுமத்திய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இவ்வாறு இளைஞர்களை போராட்டங்களுக்குள் ஈடுபடுத்தி அவர்களது வாழ்ககையினை சீரழிக்க வேண்டாமெனே கையெடுத்து கும்பிட்டு வேண்டுகோள் வைப்பதாக தெரிவித்தார்.
பால்மா, எரிவாயு, எரிபொருள் போன்றவற்றுக்கு வரிசை நிற்கிறது. அது எங்களுக்கும் தெரியும். இது சர்வதேச பிரச்சினை. பல நாடுகளில் இதே போன்ற சிக்கல் நிலை காணப்படுகிறது. அனைவரும் இணைந்து இந்த பிரச்சசினையை தீர்க்க வேண்டும். விரைவில் இந்த நிலைமாறும் எனவும் அவர் மேலும் தனது கருத்துகளை முன்வைத்தார்.
மக்கள் விடுதலை முன்னணி ஆரமப காலங்களில் மோசமான செய்றாடுகளை இலங்கையில் செய்தகவும், “உங்களது கட்சிக்கும், உங்களுக்கும் வரிசை தொடர வேண்டும், பாடசாலைகள் மூடப்படவேண்டும், நாடு சீரழிய வேண்டும். அதனை பார்க்க வேண்டும், அதனை பார்த்து ரசிக்க வேண்டும். இதுவே உங்களது விருப்பம்” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸ்ஸாநாயக்கவை நோக்கி கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.
ஜனநாயக உரிமைகளின் கீழ் ஜனாதிபதியோடு இணைந்து செயற்பட்டு நாட்டை மீட்டெடுப்போம் என தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
