தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அரச எதிர்ப்பு போராட்டம் தலவாக்கலையில் இன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய காங்கிரஸ் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் பாரளுமன்ற உறுப்பினர் உதயகுமார், பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரச்சார செயலாளர் பரணீதரன், மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். பல்லாயிரக்கணகான மக்கள் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அரசாங்கத்தை வீடு செல்லுமாறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் கோஷங்கள் வானை பிளந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

