இன்று இரவு பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகை முன்னதாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே கடும் மழை பெய்த காரணத்தினால் மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.
அதனை தொடர்ந்தும் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் ஆரம்பித்த வேளையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்க்க முயற்சித்ததோடு, பொலிஸாரை தாக்கவும் முயற்சி செய்தனர்.