பெற்றோர் மீது வழக்குத் தொடர்ந்தார் நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் பல ரசிகர்களைக் கொண்டவர் நடிகர் விஜய். நடிகர், சிறப்பாக நடனமாடக் கூடியவர், பாடகர் என திறமைகளை வளர்த்து முன்னிலை வகிக்கும் நடிகர் விஜய் இயக்குநரும் நடிகருமான சந்திரசேகரினதும், சோபனாவினதும் மகனாவார்.

சமீபத்தில் அவரது தந்தை சந்திரசேகரனால் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் எனும் இயக்கத்தை ஆரம்பிக்கப்பட்டு தலைவராக பத்மநாபனதும், செயலாளராக தந்தை சந்திரசேகரனதும், பொருளாளராக தாயார் ஷோபனாவினதம் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பில் மறுத்த நடிகர் விஜய், தனது பெயரைப் பயன்படுத்தி நடாத்தப்படும் கூட்டங்களுக்கு தடைவிதிக்குமாறு கூறி தனது பெற்றோர் உட்பட பதினொரு பேருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.

குறித்த வழக்கிற்கு எதிராக பெற்றோரால் மனுத்தாக்கல் செய்யப்பட்டதுடன், அதற்காக விஜய் தரப்பில் இருந்து யாரும் சமூகமளிக்காததால் குறித்த வழக்கானது எதிர்வரும் 27ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிபதியால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் மீது வழக்குத் தொடர்ந்தார் நடிகர் விஜய்
பெற்றோர் மீது வழக்குத் தொடர்ந்தார் நடிகர் விஜய்

Social Share

Leave a Reply