ரம்புக்கணை துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி வழங்கவில்லை

ரம்புக்கணையில் போராட்ட காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு அனுமதி வழங்கவில்லையென பொலிஸ் மா அதிபர் C.D விக்ரமரட்ண மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் C. W. C. தர்மரட்ண, மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் K. B. கீர்த்திரட்ண ஆகியோரே துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தை விசாரணை செய்யும் விசேட பொலிஸ் குழுவினர் போராட்ட காரர்கள் மீதான துப்பாக்கி பிரயோகத்துக்கு நான்கு T 56 ரக துப்பாக்கிகளும், 35 ரவைகளும் பாவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிகளை இயக்கிய பொலிஸார் தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு செய்து வருகிறது. பொலிஸ் விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் இறந்த சமிந்த லக்சானின் இறுதி கிரியைகள் இன்று நடைபெறுமென முதலில் தெரிவிக்கப்பட்ட போதும் நாளையே நடைபெறவுள்ளது.

ரம்புக்கணை துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி வழங்கவில்லை

Social Share

Leave a Reply