கண்டியில் 17 வயது மாணவன் மரணம்

கண்டி, கட்டுகஸ்தோட்டையை சேர்ந்த 17 வயது மாணவன் மாவனல்லை பகுதியிலுள்ள மீயன் எல்ல நீர் வீழ்ச்சியில் வீழ்ந்து மரணித்துள்ளார். 8 இளைஞர்கள் குறித்த நீர்வீழ்ச்சியினை பார்ப்பதற்கு சென்றுள்ளனர். அவர்கள் நீர்வீழ்ச்சியினை பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளையில் உயிரிழந்த இளைஞன் சறுக்கி நீர் வீழ்ச்சிக்குள் விழுந்துள்ளார்.

வீழ்ந்தவர் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டியில் இன்று காலை மண் சரிவு காரணமாக 29 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில் இன்று இரண்டாவது மரணம் நிகழ்ந்துள்ளது.

கண்டியில் 17 வயது மாணவன் மரணம்

Social Share

Leave a Reply