கூட்டமைப்பு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவில்லை

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அனைவரும் கோருவது போன்று ஜனாதிபதி பதவி விலகவேண்டுமென்பதே தமது முதற் கோரிக்கையென அவர் தெரிவித்துள்ளார். இந்தளவு சிக்கல்களுக்கும் ஜனாதிபதியே காரணம். அவர் முதலில் பதவி விலக வேண்டுமென தெரிவித்துள்ள சுமந்திரன், நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி பெற்றால் மீண்டும் ஒரு அமைச்சரவை உருவாகும். அதில் எதிரார்த்த மாற்றங்கள் எதுவும் இடம்பெறாதென கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளும் தரப்பு இதுவரை பார்க்க கூடவில்லை. அது தொடர்பில் எவரும் அவர்களோடு பேசவில்லையெனவும் தெரிவித்துள்ள சுமந்திரன்

அரசியலமைப்பின் 21வது திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதித்திருந்ததோடு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளன என்ற கருத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன் வைத்துள்ளார்.

கூட்டமைப்பு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவில்லை

Social Share

Leave a Reply