நிதியமைச்சர் அலி சப்ரிக்கு அவருடைய முந்தைய நீதியமைச்சர் பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
அலி சப்ரி நீதி அமைச்சராக இன்று (26.04) பிற்பகல், கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
அவர், நிதி மற்றும் நிதியமைச்சராக தொடர்ந்து செயற்படவுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தும் இந்த பதவி பிராமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சமகால சிக்கலில் காணப்படும் இரண்டு முக்கியமான விடயங்கள் நிதி மற்றும் நீதி. இரண்டையும் ஒரே தருணத்தில் கையாளும் பொறுப்பு ஒருவரிடமே கையளிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.