லிற்றோ சமையல் எரிவாயுவினை நகரப்பகுதிகளுக்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும் மட்டுப்படுத்தபோவதாக லிற்றோ நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 30,000 சிலிண்டர்கள் மட்டும் விநியோகிக்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு நாளைக்கு 80,000 சிலிண்டர்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டு வந்துள்ளன. இதற்காக 30 மில்லியன் டொலர்கள் தேவைபப்டுகின்றன. நாட்டின் சூழ்நிலையினை கருத்திற் கொண்டு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென அந்த அதிகாரி மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.
விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் மற்றும் எரிவாயு வாங்கும் அனைவரும் பணம் கொடுத்தே எரிவாயுவினை பெற்றுக் கொள்கிறார்கள். பிறகு ஏன் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டும்? அத்தோடு சமையல் எரிவாயு கொள்வனவுக்கும் கடன்களும் நிதியுதவிகளும் வழங்கப்படுகின்றன என்பது சுட்டிக்காட்டத்தக்கது.