இடைக்கால அரசாங்கம் சதி. சஜித்துக்கு அச்சுறுத்தல்.

நாட்டு மக்களும் போராடும் மக்களும் ராஜபக்சர்கள் உட்பட அரசாங்கமும் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றே கோருகின்றனர் எனவும், இடைக்கால அரசாங்கம் என்ற குண்டைக் கொண்டு வந்தது ஒரு சதியென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

போராட்டத்தை தோற்கடிப்பதற்காக கொண்டு வரப்பட்ட கயிற்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு உறுப்பினரும் சிக்கவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்ற சுதந்திரத்திற்கான போராட்டத்தின் ‘ஐக்கிய சக்தி பாத யாத்திரை நேற்று (29.04 நான்காவது நாளாக தங்கோவிட்டவில் ஆரம்பித்து அதன் யக்கல நகரத்தில் நிறைவடைந்திருந்தது.

இடைக்கால அரசில் இணையுமாறு தனக்கு தொலைபேசி மூலமாக 24 மணி நேரமும் பலர் பேசி வருவதாகவும், அதன் போது அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து தன்னை நீக்க வெண்டிய சூழல் உருவாகுமென அச்சறுத்துவதாகவும் சஜித் தெரிவித்துள்ளார்.

நான்காம் நாள் நடைபயணத்தை நிறைவு செய்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாத யாத்திரை இன்று பாலியகொடையை வந்தடையவுள்ள அதேவேளை நாளையதினம் மே தின ஊர்வலமாக கொழும்பை வந்தடையவுள்ளது.

இடைக்கால அரசாங்கம் சதி. சஜித்துக்கு அச்சுறுத்தல்.

Social Share

Leave a Reply