குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் இன்றும் கோளாறுகள் ஏற்பட்டுள்ளமையினால் கடவுச்சீட்டுக்கு இன்று வினைப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சிக்கல் நிலை ஏற்பட்டு நேற்றைய தினம் மறுசீரமைக்கப்பட்ட நிலையில் இன்றும் மீண்டும் கோளாறு ஏற்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் கடவுச் சீட்டுக்காண விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
