கலவரத்தில் பாரளுமன்ற உறுப்பினர் கொலை

நடைபெற்று வரும் கலவரங்களில் பொலநறுவை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகொரல நிட்டம்புவவில் வைத்து மரணமாகியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரும், அவரது மெய்பாதுகாவலரும் வாகனத்திலிருந்து தப்பியோடும் காட்சி கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. அதன் பின்னர் என்ன நடைபெற்றது என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் எந்தவித தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை.

(செய்தி திருத்தம் செய்யப்பட்டுள்ளது)

கலவரத்தில் பாரளுமன்ற உறுப்பினர் கொலை

Social Share

Leave a Reply