அங்கஜன் MP இன் அலுவலம் தீக்கிரை

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைததுள்ளன. சேத விபரங்கள் வெளியாகவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் \ஊடக செயலாளரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை.

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த கலவரங்களில் வடக்கில் பாரிய சம்பவங்கள் எதுவம் பாதிவாகியிருக்காத நிலையில் இரண்டாவது சம்பவமாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரது வாகனம் சேதப்படுத்தப்பட்டிருந்தது.

அங்கஜன் MP இன் அலுவலம் தீக்கிரை

Social Share

Leave a Reply