அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் இன்று மிகவும் கடுமையாக இறுக்கப்படுவதாக பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கலகங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக மிகவும் இறுக்கமாக நடவடிக்கைகள் எடுக்குமாறு பொலிஸார் பணிக்கப்பட்டுள்ளனர். வாகனங்களை கடுமையாக சோதனை செய்யுமாறும், முழுமையான பலத்தினை பாவித்து கலகங்களை கட்டுப்படுத்துமாறு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தனியார் மற்றும் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
