ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. பாரளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தான் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக சஜித் பிரேமதாசாவுக்கு அறிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை எனவும், நிபந்தனைகளை போடுவதாகவும், நிபந்தனைகளை போடுவதற்காகன நேரம் இதுவல்ல எனவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தான் மட்டுமல்ல மேலும் பலர் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி செயற்படவுள்ளதாகவும், வாக்களிப்பின் போது அது தெரியவருமெனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை பொறுப்பெடுத்து, அதன் பின்னர் நிபந்தனைகளை போட்டு மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்ற கருத்தை தான் சஜித் பிரேமதாசாவுக்கு தெரிவித்ததாகவும், இன்று முழு நாளும் தொடர்ந்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டும் எந்தவித முடிவுகள் எட்டப்பபடவில்லை என்ற குற்றச்சாட்டையும் ஹரின் பெர்னாண்டோ முன்வைத்ததுள்ளார்.

புதிதாக அமையவுள்ள இடைக்கால அரசாங்கத்துக்கு தான் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு.

Social Share

Leave a Reply